25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதிசுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி 479.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ் தானின் நிஜினா சைட்குலோவா-முகமது கமலோவ் ஜோடி 481.3 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. சீனதைபேயின் செங் யென் சிங்-ஹிக் சியாங் சென் கூட்டணி 412.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகாசாஹல்(237.9 புள்ளி)தங்கப்பதக்கமும், வன்ஷிகா சவுத்ரி (236.7 புள்ளி) வெள்ளிப்பதக்க மும் வென்றனர். இந்தோனேசியாவின் ஆசிபாரிஹாததுல் வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன் இளையோர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷி புர்வா (234.8 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், சாஹிக் கோக்லா (233) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

 பெண்கள் ஜூனியர் மற்றும் இளையோர்அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப்பதக் கத்தை வென்றது. முடிவில் இந்தியா 10 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் தொடருகிறது. உஸ்பெ கிஸ்தான் 3 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News